×

தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் கரூரில் நாளை நடக்கிறது

கரூர், அக்.10: தனியார் துறை நிறுவனங்களும் தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள அனைத்துவகை பதிவுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிதோறும் கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வளாகத்தில் நடைபெற்று வருகிறது. இந்தவாரத்திற்குரிய தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமானது நாளை (11ம்தேதி) காலை 11மணிக்கு நடைபெறஉள்ளது. இம்முகாமில் 10, 12ம்வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, கணினிப்பயிற்சி, பட்டம்முடித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தங்களின் கல்வி சான்றிதழ்கள் மற்றும் சுயக்குறிப்புகளுடன் கலந்துகொண்டு வேலைவாய்ப்பினை பெற்றுக்கொள்ளலாம். தனியார் துறை நிறுவனங்களும் கலந்துகொண்டு தங்களுக்குத் தேவையான நபர்களை அவர்களது நிர்வாகிகளைக் கொண்டோ அல்லது நேரில் வருகைபுரிந்தோ தேர்வு செய்துகொள்ளலாம்.

இது ஒருஇலவசப்பணியே ஆகும். இதன் மூலம்தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு அவர்களது வேலைவாய்ப்பு பதிவு மூப்பு ரத்து செய்யப்படமாட்டாது. தனியார் துறை பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள வேலைவாய்ப்பற்ற மற்றும் இவ்வாண்டு கல்லூரி படிப்பினை முடித்துவேலை தேடும் இளைஞர்கள் வரும் வெள்ளிக்கிழமை அன்று காலை 11மணியளவில் கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வளாகத்தில் நடைபெறஉள்ள முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் அன்பழகன் தெரிவிததுள்ளார்.

Tags : internship camp ,Karur ,
× RELATED 2000 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட கரும்பு அறுவடை பணிகள் தீவிரம்