×

கரூர் திருமாநிலையூரில் குழாய் கசிவால் வீணாகும் குடிநீர்

கரூர், அக்.10: கரூர் திருமாநிலையூரில் குடிநீர்குழாய் கசிவு ஏற்பட்டு குடிநீர் வீணானது. கரூர் திருமாநிலையூர் அரசுநடுநிலைப்பள்ளி அருகே குடிநீர்குழாயில் கசிவு ஏற்பட்டது, சிறிய குழாய் உடைந்ததால் அந்த இடத்தில் உள்ள குழியில் குடிதண்ணீர் நிரம்பியது. அதன்பின்னரும் இதனை சரிசெய்யவில்லை. இதனால் தண்ணீர் ததும்பி அருகில்உள்ள வடிகாலில் வழிந்து வீணானது. கரூர் நகராட்சி பகுதியில் தினமும் ஏதாவது ஒருபகுதியில்இதுபோன்று குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாவது அன்றாடம் நடைபெறும் ஒருநிகழ்ச்சியாகி விட்டது. இதனால் குடிநீர் வீணாவதை தடுக்க முடியாமல் நிர்வாகமே வேடிக்கை பார்க்கும் நிலைக்கு பொதுமக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Tags : Karur Thirumanthiyur ,
× RELATED நாங்குநேரியில் குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்