×

சேதமடைந்த வாய்க்கால் பாலத்தை சீரமைக்க வேண்டும் மக்கள் கோரிக்கை

கரூர், அக்.10: சேதம்அடைந்த வாய்க்கால் பாலத்தை சீரமைக்க வேண்டும்என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். கரூர் அருகே உள்ள மாயனூரில் அம்மா பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்தபூங்காவுக்கு மாயனூர் காவிரி கதவணைக்கு வரும் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். திருச்சி மெயின்ரோட்டில் இருந்து வரும்வழியில் ரயில்வே தண்டவாளத்தை கடந்து வரும்வழியில் பூங்கா அருகே வாய்க்கால் பாலம் உள்ளது. இந்த பாலத்தின் கைப்பிடி கம்பிகள் வளைந்து காணப்படுகிறது.மேலும் பாலமும் சேதம்அடைந்துள்ளது. தற்போது அதிக அளவில் இந்தசிறிய பாலத்தை தொட்டுக்கொண்டுநீர் செல்கிறது. அதிகம் பேர் சென்று வரும்பாலம் என்பதால் இதனை தண்ணீர் வருவதற்கு முன்னரே சீரமைத்திருக்க வேண்டும். சுற்றுலாத்தலமாக இருப்பதாலும் அதிகம்பேர் வந்துசெல்லும் பாலம்என்பதாலும் பாலத்தை வலுவாக்கி கைப்பிடி கம்பிகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

கரூர் மாவட்டத்தில் உள்ள ஒரே சுற்றுலா இடமாக திகழும் இந்தபகுதியில் குப்பைமேலாண்மை திட்டத்தை அதிகாரிகள் சரிவர செயல்படுத்துவதில்லை. மாயனூர் ரயில்நிலையம் அருகே சாலையில் ஒருபேனரை பிளாஸ்டிக்கை ஒழிப்போம் என வைத்ததோடுகடமை முடிந்தது என போய்விடுகின்றனர். இதனால் வாய்க்காலில் பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்ட கழிவுகள் வீசப்பட்டுமிதந்துகொண்டிருக்கின்றன. உயர்அதிகாரிகள்தலையிட்டு சுற்றுலாத்தலத்தை முக்கொம்பு போல பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள்கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : drain bridge ,
× RELATED நெல்லை – தென்காசி சாலையில்...