×

ராமானூரில் தேங்கிய குப்பைகளை அகற்றாததால் சுகாதார சீர்கேடு

கரூர், அக்.10: தேங்கிய குப்பையை அகற்றாததால் சுகாதார கேடு ஏற்படுகிறது. கரூர் அருகே உள்ள ராமானூரில் மெயின்ரோட்டில் குப்பைகள் அகற்றப்படவில்லை. இதனால் தேங்கி கடக்கிறது. அவ்வப்போது பெய்யும் மழை தூறலில் நனைந்து கொசுக்கள் உற்பத்தியாகிறது. இப்பகுதியில் இருப்பவர்கள் துர்நாற்றத்தினால் அவதிப்படுகின்றனர். குப்பையை தேங்க விடாமல் உடனுக்குடன் அகற்ற நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என இப்பகுதிவாசிகள் தெரிவித்தனர்.

Tags : Ramanur ,
× RELATED தோவாளையில் டூ வீலரில் செல்வோர்...