அனுமதியின்றி மணல் ஏற்றிசென்ற 4 லாரிகள் பறிமுதல் 5பேர் கைது

கரூர், அக். 10: வாங்கல் அடுத்துள்ள 16 கல்மண்டபம் பகுதி அருகே அனுமதியின்றி லாரிகளில் மணல் ஏற்றிச் செல்லப்படுவதாக வாங்கல் போலீசாருக்கு தகவல் வந்தது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் அந்த பகுதியில் தலா 3 யூனிட் மணல்களுடன் நின்று கொண்டிருந்த 3 டாரஸ் லாரிகளை, மணலுடன் பறிமுதல் செய்த போலீசார், இதே பகுதியில் நின்று கொண்டிருந்த லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்களான சரவணன், சின்னசாமி, ரமேஷ், வாசுதேவன் ஆகியோரை கைது செய்தனர். மேலும், தப்பியோடிய இரண்டு பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.மேலும், இந்த சம்பவத்தை தொடர்ந்து, கோயம்பள்ளி பகுதியிலும் அனுமதியின்றி 3 யூனிட் மணலுடன் லாரி நிற்பதை அறிந்த வாங்கல் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அங்கு மணலுடன் நின்று கொண்டிருந்த லாரியை பறிமுதல் செய்ததோடு, லாரி டிரைவர் வினோத்தையும் கைது செய்தனர். இதே போல், மற்றொருவர் மீதும் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.ஒரே நாளில் வாங்கல் போலீசார், தலா 3 யூனிட் மணலுடன், 4 லாரிகள் பறிமுதல் செய்து 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : persons ,
× RELATED மணல் கடத்திய 5 பேர் குண்டாசில் கைது