×

துப்புரவு பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்

ஈரோடு, அக்.10 :  மகளிர் குழு மூலம் நியமிக்கப்பட்ட துப்புரவு பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய ஏஐடியுசி வலியுறுத்தி உள்ளது.  ஈரோடு மாவட்ட உள்ளாட்சி துறை பணியாளர்கள் சங்கம் (ஏஐடியுசி) நிர்வாகக்குழு கூட்டம் மாவட்ட தலைவர் சின்னசாமி தலைமையில் ஈரோட்டில் நடந்தது. செயலாளர் மணியன், துணை செயலாளர்கள் அப்புசாமி, ஞானசேகரன், பொருளாளர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, பஞ்சாயத்துக்களில் பணி செய்யும் துப்புரவு பணியாளர்களில், பாதிக்கும் மேற்பட்டோர் நிரந்தரமற்ற, ஒப்பந்த தொழிலாளர்கள், மகளிர் குழுவினர்களாக உள்ளனர். இவர்களுக்கு கலெக்டர் நிர்ணயித்த தினசரி கூலி ரூ.490 வழங்குவதில்லை. எனவே முழு ஊதியம் வழங்க வேண்டும். பணி நிரந்தரப்படுத்துதல் சட்டப்படி, இரண்டு ஆண்டில், 480 நாட்கள் பணி செய்தவர்களை நிரந்தரமாக்க வேண்டும்.

 மேலும் தூய்மை காவலர்களுக்கு மற்ற துப்புரவு பணியாளர்களுக்கு வழங்குவதுபோல ஊதியம் வழங்க வேண்டும். அவர்களுக்கு அரசின் இதர நலன்கள், சலுகைகள் வழங்க வேண்டும். தீபாவளி பண்டிகைக்கு முன்பணம் வழங்க வேண்டும். உள்ளாட்சிகளில் பணி செய்யும் நிரந்தரமற்ற துப்புரவு தொழிலாளர்களுக்கு, தீபாவளி பண்டிகைக்காக ரூ.10 ஆயிரம் போனசாக வழங்க வேண்டும், சீருடைகள், தையல் கூலி வழங்க வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் மகளிர் குழு மூலம் நியமிக்கப்பட்டவர்களுக்கு வார விடுமுறை, சலுகைகள் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்ட முடிவில் கோரிக்கை மனுக்களை கலெக்டர் அலுவலகம் மற்றும் மாநரகாட்சி அலுவலகத்தில் அளிக்கப்பட்டது.

Tags : Cleaning employees ,
× RELATED நாகையில் சமூக இடைவெளியை...