×

உடன்குடி தசரா திருவிழாவில் பக்தர்களுக்கு நலத்திட்ட உதவி

உடன்குடி, அக். 10: உடன்குடி  தசரா திருவிழாவையொட்டி பக்தர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. உடன்குடி  தசரா திருவிழாவையொட்டி பாரதமாதா நண்பர்கள் அன்னதானக்குழு சார்பில்  நலிந்தோருக்கு தையல் இயந்திரங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர  சைக்கிள்கள், சலவை பெட்டிகள், சாலையோரம் மரக்கன்று நட்டு தண்ணீர் ஊற்றி பராமரிக்கும் 500 பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா உடன்குடி-  குலசேகரன்பட்டினம் சாலை இசக்கியம்மன் கோயில் பகுதியில் நடந்தது. தலைமை வகித்த பெருந்தலைவர் மக்கள் கட்சி மாநில நிறுவன தலைவர் என்.ஆர். தனபாலன், நலத்திட்ட உதவிகள் வழங்கிப் பேசினார். பாரத மாதா நண்பர்கள்  அன்னதானக்குழு தலைமை நிலைய ஆலோசகர்கள் ராஜேந்திரன், முத்து, ராமு, முத்து,  கணேசன், சுதாகர், ராமலிங்கம், குமார், பாலமுருகன், அருண்குமார், பாஸ்க ர்,  பொன்னம்பலம், டேவிட் முன்னிலை வகித்தனர். நலத்திட்ட உதவிகளைத்  தொடர்ந்து 10,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவில் அன்னதானக்குழு பொறுப்பாளர்கள் சுந்தரேசபாண்டியன், மைக்கேல்ராஜ்,  ராமச்சந்திரன், வெள்ளையன், முருகானந்தம், லிங்கபாண்டியன், ஜெயபால்,  கார்த்தீசன், சரவணன், மாதவன், பெருந்தலைவர் மக்கள் கட்சியின் சென்னை மேற்கு  மாவட்டத் தலைவர் வைகுண்டராஜா, மாநில கொள்கை பரப்புச் செயலாளர் விஜய்மாரிஸ்,  தலைமை நிலைய செயலாளர் சிவக்குமார், குணசீலன், இந்து மகாசபா மாவட்ட தலைவர்  சக்திகுமார் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியை பாரத மாதா நண்பர்கள்  அன்னதானக்குழு ஒருங்கிணைப்பாளர் பாண்டியன் ஒருங்கிணைத்து வழங்கினார்.  முத்து நன்றி கூறினார்.

Tags : pilgrims ,festival ,Umkudi Dasara ,
× RELATED கார்த்திகை மாத பவுர்ணமிக்கு பருவத மலை...