×

கிராமங்களுக்கு அரசு பஸ் திடீர் நிறுத்தம்-மக்கள் புகார்

தெற்குகாடுவெட்டி கிராமத்தில் திண்ணை பிரசாரம் செய்து இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்த அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, அப்பகுதி கிராம மக்களின் கோரிக்கைகளையும் கேட்டறிந்தார். அப்போது கிராம மக்கள், கடந்த சில நாட்களாக எங்களது கிராமத்தில் இருந்து இயக்கப்பட்ட அரசு பேருந்து திடீரென நிறுத்தப்பட்டு விட்டது. தொடர்ந்து அரசு பேருந்து வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர். உடனடியாக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, கிராம மக்களின் கோரிக்கையை தெரிவித்தார். அதனை தொடர்ந்து கிராம மக்களும் போக்குவரத்து துறை அமைச்சரிடம் பேசினர். நிறுத்தப்பட்ட அரசுப் பேருந்தை உடனடியாக இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிராம மக்களிடம் போக்குவரத்து துறை அமைச்சர் உறுதி அளித்தார்.

Tags : Government bus stop ,villages ,
× RELATED தமிழக மலைக் கிராமங்களுக்கு 156...