×

அமர்சேவா சங்கத்தில் ஐடிஐ தொடக்க விழா

தென்காசி, அக். 10: ஆய்க்குடி அமர்சேவா சங்கத்தில் அமர்சேவா சாரதாம்பாள் ஐடிஐ துவக்க விழா நடந்தது. அமர்சேவா சங்க செயலாளர் சங்கர ராமன் வரவேற்றார். அலுவலக மேலாளர் நீலகண்டன் தொகுத்து வழங்கினார். விழாவிற்கு முகம்மது அபுபக்கர் எம்எல்ஏ தலைமை வகித்து ஐடிஐயை திறந்து வைத்து பேசினார். மேலும் 60 மாற்றுத்திறனாளிகளுக்கு பயிற்சி புத்தகத்தை வழங்கினார்.

விழாவில் துணை தலைவர் டாக்டர் முருகையா, பெரியசாமி, கவுதம் ராஜா, குலாம்மைதீன், பெங்களூரு கணேசன், ராமச்சந்திரன், முஸ்லிம் லீக் மாநில துணை செயலாளர் இப்ராகிம் மக்கி, மாநில பேச்சாளர்கள் தென்காசி முகம்மது அலி, மண்டல இளைஞரணி அமைப்பாளர் பாட்டப்பத்து கடாபி உட்பட பலர் கலந்து கொண்டனர். சேதுராமன் நன்றி கூறினார்.

Tags : ITI Opening Ceremony ,Amarseva Society ,
× RELATED கொரோனா அச்சுறுத்தல் கலெக்டர் அலுவலகத்தில் கை கழுவ தனி அறை