×

2 வயது குழந்தை மர்மசாவு?

கடையநல்லூர், அக். 10:  கடையநல்லூரை  அடுத்த கருப்பாநதி அணைக்கட்டு அருகே உள்ள கலைமான்நகர் பளியர்  குடியிருப்பை சேர்ந்த செல்வக்குமார் மகன் அஜெய் (2). கடந்த  7ம் தேதி முதல் அஜெய் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளான். உடனடியாக பெற்றோர், கடையநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.  ஆனால் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், குழந்தைக்கு மூச்சுத்திணறல்  ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து குழந்தையை கடையநல்லூர்  அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதனிடையே குழந்தை இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி செல்வக்குமார் சொக்கம்பட்டி போலீசில் புகார் செய்தார். எஸ்ஐ வேல்பாண்டி வழக்குப்பதிந்து குழந்தை உடலை பிரேத  பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். பிரேத பரிசோதனை அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை  மேற்கொள்ளப்படும் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.

Tags : baby ,Marmazou ,
× RELATED கணவர் இறந்த நிலையில் ஆறாவதாக பிறந்த...