×

நெல்லை பிஷப்புடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

நெல்லை, அக். 10:  நாங்குநேரி இடைத்தேர்தல் பிரசாரத்துக்கு நெல்லை வந்த மு.க.ஸ்டாலின், பிஷப்பை சந்தித்து பேசினார். நாங்குநேரி இடைத்தேர்தல் பிரசாரத்துக்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் நெல்லை வந்தார். நேற்று காலை கிருஷ்ணாபுரம், சிவந்திபட்டி ஆகிய பகுதிகளில் ஆதரவு திரட்டிய மு.க.ஸ்டாலின், நெல்லை திருமண்டல பேராயர் கிறிஸ்துதாசை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அவருக்கு சால்வை அணிவித்து 20 நிமிடங்கள் உரையாடினார்.

அப்போது நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன், பிஷப்பிடம் ஆசி பெற்றார். தொடர்ந்து சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டார். உடன் தேர்தல் பணிக்குழு தலைவர் ஐ.பெரியசாமி எம்எல்ஏ, கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவுடையப்பன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : meeting ,MK Stalin ,Paddy Bishop ,
× RELATED திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது