×

குற்றாலத்தில் வெயில் சுட்டெரிப்பு

தென்காசி, அக். 10: குற்றாலத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து வெயில் அடித்தபோதும் அருவிகளில் ஓரளவு தண்ணீர் நன்றாக விழுகிறது.
குற்றாலத்தில் இந்தாண்டு துவக்கத்தில் சீசன் சற்று சொதப்பினாலும், சீசன் காலம்  முடிவடைந்த பிறகும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களிலும் அருவிகளில் தொடர்ந்து தண்ணீர் விழுகிறது. கடந்த சில நாட்களாக சாரல் இல்லை. மேகமூட்டமும் காணப்படவில்லை. பகல் வேளையில் நல்ல வெயில் காணப்படுகிறது. இருப்பினும் அருவிகளில் தண்ணீர் ஓரளவு நன்றாக விழுகிறது.

மெயினருவியில் ஆண்கள் பகுதியில் நன்றாகவும், பெண்கள் பகுதியில் குறைவாகவும் தண்ணீர் விழுகிறது. ஐந்தருவியில் 3 பிரிவுகளில் ஓரளவு நன்றாகவும், இரண்டு பிரிவுகளில் குறைவாகவும் தண்ணீர் விழுகிறது. பழைய குற்றால அருவி, புலியருவி ஆகியவற்றில் குறைவாக தண்ணீர் விழுகிறது. சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.

Tags : Courtallam ,
× RELATED குற்றாலத்தில் ஒரு வாரமாக...