×

இணையதளம் மூலம் வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்

திருத்துறைப்பூண்டி, அக்.10: இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள பெயர்கள், முகவரிகள், புகைப்படங்கள் திருத்தங்கள் செய்வதற்கான தேதி இம்மாதம் 15ம்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தமிழகம் முழுவதும் உள்ள கிளைகளில் வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்களை பொதுமக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் நடத்தி கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் தெற்கு மாவட்டம் திருத்துறைப்பூண்டி கிளை பொன்னையன் செட்டி தெருவில் உள்ள கிளை அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் பெயர் திருத்தம் முகாம் நேற்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்றது. இந்திய தேர்தல் ஆணைய செயலி மற்றும் இந்திய தேர்தல் ஆணைய இணையதளங்கள் மூலமாக பெயர் திருத்தங்கள் நடைபெற்றது.

இம்முகாமிற்கு கிளை தலைவர் அன்வர்தீன் தலைமை வகித்தார். மாவட்ட மாணவரணி செயலாளர் ஹாஜாமைதீன், மாவட்ட செய்தி தொடர்பாளர் ராஜா முஹம்மது, கிளை துணைச் செயலாளர் முஹம்மது மீரான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இம்முகாமில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Tags :
× RELATED பொன்மகள் வந்தாள் போலி வெப்சைட்டில் வெளியானது