×

நகராட்சி ஆணையர் தகவல் உப்பூரில் கிராமசேவை மையத்தில் இயங்கும் அங்காடிக்கு புதிய கட்டிடம் கட்ட மக்கள் வலியுறுத்தல்

முத்துப்பேட்டை, அக்.10: முத்துப்பேட்டை அடுத்த உப்பூரில் உள்ள அங்காடி கட்டிடம் சேதமடைந்ததால் புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த உப்பூர் மெயின் ரோட்டில் சுற்றுப்பகுதி மக்களுக்காக அங்காடி பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் 1000க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்நிலையில் அங்காடி கட்டிடத்தின் மேல்பகுதியில் சிமென்ட் பூச்சுகள் இடிந்து விழுவதுடன் கட்டிட சுவர்களும் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் மழைநீர் ஒழுகி அங்காடியில் இருப்பு வைக்கப்பட்டு இருந்த மக்களுக்கு வழங்கவேண்டிய பொருட்கள் நனைந்து வீணாகியது. இதனையடுத்து அங்காடிக்கு புதிய கட்டிடம் கட்டித்தரவேண்டும் என்று இப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

ஆனாலும் அரசு கண்டுக்கொள்ளவே இல்லை. இதனால் இருப்பு வைக்கப்பட்டு வந்த பொருட்கள் மழைநீரில் சேதமாவதுடன், எலி தொந்தரவும் அதிகரித்தது. இதனால் ஒரு ஆண்டுக்கு முன்பு இந்த அங்காடி அருகே இருக்கும் கிராம சேவை மையம் கட்டிடத்தில் மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதனால் இக்கட்டிடத்தில் நடத்தப்பட்டு வந்த கிராமசேவை கூட்டங்கள் உள்ளிட்ட பணிகள் தடைபட்டது. எனவே அங்காடிக்கு புதிய கட்டிடம் கட்டித்தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனாலும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மக்களின் கோரிக்கையை அலட்சியப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. இனியும் காலதாமதப்படுத்தாமல் இங்குள்ள பழைய அங்காடி கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : commissioner ,building ,Village Service Center ,Uppur ,
× RELATED காலை 5.30 மணி முதல் மாதிரி வாக்குப்பதிவு:...