×

கூத்தாநல்லூரில் புதிய சாலைகள் அமைக்க ரூ.3.20 கோடி நிதி ஒதுக்கீடு

மன்னார்குடி, அக்.10: கூத்தாநல்லூர் பகுதியில் ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தின்கீழ் ரூ.3.20 கோடி மதிப்பில் புதிய சாலைகள் அமைக்கப்பட உள்ளதாக நகராட்சி ஆணையர் குமரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நகராட்சி ஆணையர் குமரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: ஒருங்கிணைந்த நகர்புற வளர்ச்சி திட்டத்தின் (2018-19) கீழ் கூத்தாநல்லூர் நகராட்சியில் உள்ள 24 வார்டுகளில் முதல் கட்டமாக 13 வார்டுகளில் பழுதடைந்துள்ள தார்சாலைகளான சுமார் 6 கிமீ நீளத்திற்கு புதிய தார் சாலைகள் போடுவதற்காக ரூ. 3.21 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, 4வது வார்டில் அய்யப்பன் கோயில் தெரு, 5வது வார்டில் பனகாட்டங்குடி நடுத்தெரு, கீழத்தெரு, ஜன்னத்நகர் 2 வது குறுக்கு தெரு, எம்ஜிஆர் நகர், 13வது வார்டில் மரக்கடை தெற்குதெரு, வடக்குதெரு, 14வது வார்டில் மேலகொண்டாழி லைன், தமிழர் தெரு மற்றும் தீன்நகர் உள்ளிட்ட தெருக்களில் ரூ.1.78 கோடி மதிப்பில் புதிய தார்சாலைகள் அமைக்கப்படவுள்ளது. இதேபோல் 1வது வார்டில் கோரையாறு வடக்கு தெரு, 7வது வார்டு நேருஜி சாலை, 11வது வார்டில் மரக்கடை பிரதான சாலை, 15வது வார்டில் பாய்க்கார புதுத்தெரு, 19வது வார்டில் முகமது அலி தெரு, இஸ்மாயில்தெரு மற்றும் 21வது வார்டில் கரும்புக்கொல்லை தெரு உள்ளிட்ட தெருக்களுக்கு ரூ. 1.43 கோடி மதிப்பிலும் ஆக மொத்தம் ரூ.3.21 கோடி மதிப்பில் புதிய தார்சாலைகள் அமைக்கப்படவுள்ளன. இவ்வாறு ஆணையர் குமரன் தெரிவித்துள்ளார்.

Tags : roads ,Koothanallur ,
× RELATED அருந்தமிழ்குன்றம் அவலக்குன்றம் ஆனது:...