×

ஆலோசனை கூட்டத்தில் அறிவுறுத்தல் திருவாரூர் பகுதிகளில் லேசான மழை

திருவாரூர், அக்.10: திருவாரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மிதமான மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். காவிரி டெல்டா மாவட்டங்களின் சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணை திறக்கப்பட்ட போதிலும் ஆறுகள் மற்றும் வாய்க்கால்கள் சரிவர தூர்வாராததன் காரணமாக வயல்வெளிகளை நீர் சரிவர சென்றடையவில்லை. இதன் காரணமாக விவசாயிகள் சம்பா சாகுபடியை சரிவர மேற்கொள்ள முடியாமல் இருந்து வருகின்றனர். மேலும் 75 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் நேரடி நெல் விதைப்பில் ஈடுபட்டுள்ளதால் தற்போது நெற்பயிர்கள் அனைத்தும் 25 நாட்களுக்கு மேற்பட்ட பயிராக உள்ளதால் இதற்கு உரிய நீர் கிடைக்காமல் இருந்து வருகிறது.

இந்நிலையில் வடகிழக்கு பருவமழை வரும் 20ம் தேதி துவங்குவதற்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தற்போது வெப்பச்சலனம் காரணமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. நேற்று திருவாரூர் மாவட்டத்தில் காலை முதல் மதியம் வரை வழக்கம்போல் வெயில் அடித்த நிலையில் மதியம் வானம் மேகமூட்டமாக மாறியது. அதன் பின்னர் சுமார் அரை மணி நேரம் வரையில் திருவாரூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மிதமான மழை பெய்தது. இதன் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags : meeting ,areas ,Thiruvarur ,
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...