×

திருவாரூர் மாவட்டத்தில் 12ம்தேதி பொதுவிநியோக திட்ட குறைதீர்க்கும் கூட்டம்

திருவாரூர், அக்.10: திருவாரூர் மாவட்டத்தில் வருகிற 12ம்தேதி பொதுவிநியோகத்திட்ட குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து கலெக்டர் ஆனந்த் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:திருவாரூர் மாவட்டத்தில் பொதுவிநியோக திட்டத்தினை மேம்படுத்திடும் வகையில் பொதுவிநியோக திட்ட குறைதீர் கூட்டம் வருகிற 12ம் தேதி நடக்கிறது. அதன்படி, திருவாரூர் தாலுகா வடகரை கிராமத்தில்ஆர்.டி.ஒ தலைமையிலும், நன்னிலம் தாலுகா வடகுடி கிராமத்தில் திருவாரூர் கூட்டுறவு சங்க துணைப்பதிவாளர் தலைமையிலும், குடவாசல் தாலுகா திருவிழிமிழலை கிராமத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் தலைமையிலும், வலங்கைமான் தாலுகா மருவத்தூர் கிராமத்தில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தலைமையிலும், நீடாமங்கலம் தாலுகா பரப்பனமேடு கிராமத்தில் மாவட்ட வழங்கல் அலுவலர் தலைமையிலும்,

மன்னார்குடி தாலுகா ஆலாத்தூர் கிராமத்தில் மன்னார்குடி ஆர்டிஓ தலைமையிலும், திருத்துறைப்பூண்டி தாலுகா கச்சனம் கிராமத்தில் மன்னார்குடி கூட்டுறவு சங்க துணைப்பதிவாளர் தலைமையிலும், கூத்தாநல்லூர் தாலுகா கண்கொடுத்தவனிதம் கிராமத்தில் திருவாரூர் நுகர்வோர் மொத்த விற்பனை பண்டக சாலை துணை பதிவாளர் தலைமையிலும் குறைகேட்கும் கூட்டம் 12ம்தேதி காலை 10 மணியளவில் நடைபெறுகிறது.
எனவே, சம்பந்தப்பட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பொதுவிநியோகத்திட்ட அங்காடிகளின் செயல்பாடுகள் குறித்தும் தங்களது குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் போன்றவைகள் குறித்தும், கடைமாற்றம், முகவரி மாற்றம் போன்றவை குறித்தும் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கலெக்டர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

Tags : Thiruvarur District 12th Public Distribution Plan Oversight Meeting ,
× RELATED 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை...