திரளான பக்தர்கள் திரண்டனர் பொன்னமராவதி அருகே அனுமதியின்றி மணல் ஏற்றிய டிராக்டர் பறிமுதல்

பொன்னமராவதி, அக்.10: பொன்னமராவதி அருகே அனுமதியின்றி மணல் ஏற்றி சென்ற டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது. காரையூர் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மேலத்தானியம் பகுதியில் மணல் ஏற்றி சென்ற டிராக்டரை மறித்து சோதனை செய்தனர். அப்போது போலீசாரை கண்டதும் டிரைவர் தப்பி ஓடி விட்டார். விசாரணையில் அனுமதியின்றி மணல் அள்ளிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து டிராக்டரை பறிமுதல் செய்து காரையூர் காவல் நிலைத்திற்கு எடுத்து சென்றனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்து வருகிறது.

Tags : devotees ,Ponnamaravathi ,
× RELATED மணல் கடத்தலை தடுப்பதில் மட்டுமே கவனம்...