×

சந்தைப்பேட்டை அரசு மகளிர் பள்ளியில் கண்காட்சி

புதுக்கோட்டை, அக்.10: புதுக்கோட்டை சந்தைப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் மற்றும் கணித கண்காட்சி நேற்று நடைபெற்றது. இக்கண்காட்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை அமுதா தலைமை வகித்தார். பள்ளியின் முன்னாள் ஆசிரியரும் புரவலருமான அஞ்சலிதேவி கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டார். இப்பள்ளியை சேர்ந்த 6 முதல் 10ம் வகுப்பு வரையுள்ள 75 மாணவிகள் தங்களது படைப்புகளை கண்காட்சியில் வைத்திருந்தனர். முன்னதாக ஆசிரியை கவிஞர் கீதா வரவேற்றார். முடிவில் தமிழாசிரியை சுமதி நன்றி கூறினார்.

Tags : Exhibition ,Government Women's School ,Marketpet ,
× RELATED அசத்தும் ஓவியக் கண்காட்சி