×

அதிகாரிகள் மீது வழக்கு பாயுமா? சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு அரிமளம் அடுத்த நெடுங்குடியில் குடிநீர் வழங்க வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம்

புதுக்கோட்டை, அக்.10: புதுக்கோட்டை மாவட்டம் அரிமழத்தை அடுத்த நெடுங்குடியில் உள்ள தலித் மக்களின் நீண்டநாள் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கமும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் இணைந்து புதுக்கோட்டையில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடத்தியது. அரிமளம் ஒன்றியத்திலுள்ள நெடுங்குடியில் தலித்துகளுக்கான மயானத்தில் உள்ள தகன மேடையை புனரமைத்து மேற்கூரை அமைத்துக் கொடுக்க வேண்டும். மக்களின் குடிநீர்த் தட்டுப்பாட்டை போர்க்கால அடிப்படையில் தீர்க்க வேண்டும்.

அவர்களின் வீடுகளுக்கு செல்லும் வழியில் உள்ள வரத்துவாரியில் பாலம் அமைக்க வேண்டும். நெடுங்குடி பேருந்து நிறுத்தத்திலிருந்து இந்திரா நகர் வரை தார்சலை அமைத்து தெருவிளக்குகள் அமைக்க வேண்டும். முனியன்கோவில் அருகே உயர்கோபுர மின்விளக்கு அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை திலகர் திடலில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்திற்கு கணேசன் தலைமை வகித்தார். இந்த உண்ணாவிரத்ததில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Tags : community activists ,hunger strike ,
× RELATED நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மதுரையில் இன்று திமுக உண்ணாவிரத போராட்டம்