×

சீர்காழி ரயில் நிலையத்தில் சிக்னல் பழுதால் 2 எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிறுத்தம்

சீர்காழி,அக்.10:சீர்காழி ரயில் நிலையத்தில் சிக்னல் கிடைக்காததல் இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் பயணிகள் பரிதவிப்புக்கு ஆளாகினர். நாகை மாவட்டம் சீர்காழி ரயில் நிலையத்தில் சென்னையிலிருந்து திருச்சி நோக்கி சென்ற சோழன் எக்ஸ்பிரஸ் ரயில், திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற சோழன் எக்ஸ்பிரஸ் ஆகிய இரண்டு ரயில்களும் நேற்று மதியம் 12.40 மணியளவில் சீர்காழி வந்தடைந்தன.அப்போது சிக்னல் கிடைக்காததால் சென்னையிலிருந்து திருச்சி செல்லும் ரயில் 30 நிமிடம் வரை சீர்காழி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. இதனால் பயணிகள் பல்வேறு சிரமத்திற்கு ஆளாகினர். பின்னர் சிக்னல் சரிசெய்யப்பட்டு ரயில் திருச்சி நோக்கி சென்றது.

இதேபோல் திருச்சியிலிருந்து சென்னைக்கு செல்லும் ரயிலுக்கு சிக்னல் கிடைக்காததால் 50நிமிடங்கள் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்தன. இதனால் பல்வேறு பணிகளுக்காக செல்ல வேண்டிய பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். பின்பு சிக்னல் சரிசெய்யப்பட்டு ரயில் சென்னையை நோக்கி சென்றது. இரண்டு ரயில்கள் சீர்காழி ரயில் நிலையத்திற்கு வந்ததையொட்டி ரயில்வே கேட் மூடப்பட்டது. ஆனால் சிக்னல் கிடைக்காததால் கேட் நீண்டநேரம் திறக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் சீர்காழி பணங்காட்டங்குடி செல்லும் சாலையில் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ரயில்வே கேட்டின் இருபுறங்களிலும் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றதால் உரிய நேரத்திற்கு செல்ல முடியாத வாகன ஓட்டிகள் ரயில்வே கேட் கீப்பரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : railway station ,Sirkazhi ,
× RELATED நாளை முதல் ஜூலை 15ம் தேதி வரை தமிழகத்தில் சிறப்பு ரயில்கள் ரத்து