×

திமுகவினர் ஆலோசனை இலவச பொது மருத்துவ முகாம்

கொள்ளிடம், அக்.10: நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே முதலைமேடுதிட்டு கிராமத்தில், பாண்டிசேரி மகாத்மாகாந்தி மருத்துவமனை கிராம பொதுமக்கள் மற்றும் கொள்ளிடம் லயன்ஸ் சங்கம் ஆகியவை பொது மருத்துவ முகாம் நேற்று முன்தினம் நடைபெற்றது. முகாமை லயன்ஸ் சங்கத் தலைவர் ஜெயவாணன் தலைமை வகித்து துவக்கி வைத்தார். முன்னாள் மாவட்ட ஆளுஞர் டாக்டர் பூசை, பொறியாளர்கள் சாமிநாதன், பாஸ்கர், லயன் சங்க பொருளாளர் ஜலபதி, விவசாய சங்கத் தலைவர் சத்தியமூர்த்தி, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் பூவராகவன், மகாத்மாகாந்தி மருத்துவகல்லூரி மருத்துவமனயை சேர்ந்த மருத்துவக் குழுவினர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முகாமில் 382 பேர் கலந்து கொண்டு மருத்துவ சிகிச்சை பெற்றனர்.

Tags : General ,Camp ,
× RELATED 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள்...