×

பழையபாளையம் கிராமத்தில் கருப்பு நிறத்தில் துர்நாற்றத்துடன் வரும் நிலத்தடி நீர்

கொள்ளிடம், அக்.10: கொள்ளிடம் அருகே பழையபாளையம் கிராமத்தில் நிலத்தடி நீர் கருப்பாக மாறி துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழையபாளையம், காடுவெட்டி, கொடக்காரமூலை பாலக்காடு ஆகிய கிராமங்களில் சன்னிதிதெரு வடக்குத்தெரு, மேலத்தெரு, முத்தரையர் தெரு, மாரியம்மன் கோயில் தெரு ஆகிய பகுதிகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் 1600 குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இங்கு 4 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். கடந்த 4 வருடங்களாக இப்பகுதியில் நிலத்தடி நீர் நிறம் மாறி விட்டது. ஊராட்சிகள் சார்பில் அமைத்து தரப்பட்ட கைபம்புகளிலும் சொந்த மாக வீடுகளில் வைத்துள்ள கை பம்புகளிலும் கடந்த 5 வருடத்திற்கு முன்பு நல்ல தண்ணீர் கிடைத்ததை இதனை அப்பகுதியை சேர்ந்த அனைவரும் பயன்படுத்தி வந்தனர். ஆனால் பழையபாளையம் கிராமத்தில் கடந்த சில வருடங்களாக நிலத்தடி நீர் நிறம் மாறி துர் நாற்றம் வீசுகிறது.

இது குறித்து பழையபாளையம் கிராமத்தை சேர்ந்த சம்பத் என்பவர் கூறுகையில் பழையபாளையம் ஊராட்சியில், நிலத்தடி நீர் மிகவும் தூய்மையாகவும் சுகாதாரமாகவும் இருந்தது. இதனையே அனைத்து மக்களும் பயன்படுத்தி வந்தனர். ஆனால் கடந்த 4 வருடங்களாக நிலத்தடி நீர் முற்றிலும் நிறம் மாறி கருமையாகவும் துர்நாற்றமும் வீசுகீறது. ஓ.என்.ஜி.சி நிறுவனம் சார்பில் எண்ணெய் எடுக்கும் பணி இப்பகுதியில் ஆரம்பித்த நாளிலிருந்து நிலத்தடி நீர் கருமையாக மாறி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நிலத்தடி நீரை பயன்படுத்த முடியவில்லை. குடிநீர்த்தட்டுப்பாட்டை போக்கும் வகையில் கொள்ளிடம் கூட்டு குடிநீர்த்திட்டம் மூலம் கிடைக்கும் நீரை பயன்படுத்தி வருகிறோம். ஆனால் தற்பொழுது கூட்டு குடிநீர்த்திட்டத்தின் மூலம் வழங்கப்படும் தண்ணீர் தேவைக்கு மிகக் குறைவாகவே உள்ளதால் போதிய குடிநீர் வழங்க வேண்டும் என்றார்.

Tags : village ,Puthupalayam ,
× RELATED வந்தவாசி அடுத்த பொன்னூர் கிராமத்தில் கால்நடை மருத்துவ முகாம்..!!