×

சீர்காழி ருத்ர மகா காளியம்மன் கோயிலில் நவராத்திரி விழா

சீர்காழி, அக்.10: சீர்காழி அரசு மருத்துவமனை சாலையில் அமைந்துள்ள ருத்ர மகா காளியம்மன் கோயிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு ருத்ர மகாகாளியம்மன் ஊஞ்சலில் சரஸ்வதி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். அப்போது சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்பு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் பக்தர்கள் செய்திருந்தனர்.

இதேபோல சீர்காழி புற்றடி மாரியம்மன் கோயிலில் நவராத்திரி முன்னிட்டு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஆயுத பூஜையை முன்னிட்டு அம்மன் சரஸ்வதி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், பக்தர்கள் செய்திருந்தனர்.

Tags : Navratri Festival ,Sirkazhi Rudra Maha Kaliamman Temple ,
× RELATED ராமச்சந்திரா மெட்ரிக் பள்ளியில் நவராத்திரி விழா