×

காரைக்கால் மக்களுக்கு தீபாவளி இலவச பொருட்களை உடனே வழங்க அரசு நடவடிக்கை தெற்கு தொகுதி எம்எல்ஏ வலியுறுத்தல்

காரைக்கால், அக்.10: காரைக்கால் மக்களுக்கான தீபாவளி இலவச பொருட்களை, உடனே வழங்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெற்கு தொகுதி எம்எல்ஏ அசனா வலியுறுத்தியுள்ளார். இது குறித்து, காரைக்கால் தெற்குத்தொகுதி எம்.எல்.ஏ அசனா நிருபர்களுக்கு அளித்த பேட்டி: புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியத்தில் வசிப்போர் பெரும்பாலானோர் வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள். இவர்களூக்கு புதுச்சேரி அரசு ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகை காலத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மக்களுக்கு இலவச சர்க்கரை, மற்றும் இலவச வேஷ்டி-சேலை வழங்கி வந்தது. அதேபோல், பண்டிக்கை காலத்தில் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் பாப்ஸ்கோ நிறுவனமும் மற்றும் குடிமைப்பொருள் வழங்கல் துறையும் இணைந்து பல்பொருள் அங்காடி திறப்பதும் வழக்கமாக கொண்டிருந்தது. ஆனால் இந்த ஆண்டில் இதுவரை அப்படி திறப்பது தொடர்பாகவும், இலவச பொருட்கள் வழங்குவது தொடர்பாகவும் எந்தவித அறிவிப்பும் செய்யப்படவில்லை. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 19 நாட்களே உள்ள நிலையில் மக்களின் பெரும் வரவேற்பை பெற்ற பாப்ஸ்கோ பல்பொருள் சிறப்பு அங்காடியை திறக்காமல் இருப்பதும், பண்டிகை காலத்திற்கு பயன்படும் சர்க்கரை மற்றும் வேஸ்டி-சேலைகளை வழங்காததும் பெரும் வேதனையையும், ஏமாற்றத்தையும் அளிக்கிறது.

எனவே, பண்டிகையை கருத்தில்கொண்டு, அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவன ஊழியர்களுக்கும் வழங்கும் பண்டிகை கால போனஸ், மற்றும் நிலுவையிலுள்ள ஊதியத்தை உடனடியாக உரிய நாட்களுக்குள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தொழிலாலர் துறையின் மூலம் கட்டிடத்தொழிலாளர் மற்றும் அமைப்புச்சார தொழிலாலர்களுக்கு தலா ரூ.2000, ரூ.1000 வீதம் பண்டிக்கை காலத்திற்கு பரிசு கூப்பன் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு இதுவரை பரிசுக்கூப்பன் வழங்குவதற்கான எந்தவித அறிகுறியும் தெரியவில்லை. எனவே பரிசுகூப்பன் தொகையை உயர்த்தி உடனடியாக வழங்க முன்வரவேண்டும். மேலும், ஆதிதிராவிட மக்களுக்கு வழங்கும் இலவச வேஸ்டி-சேலைக்கு பதிலாக அவரது வங்கி கணக்கில் தொகை செலுத்துவது வழக்கம் அவற்றையும் உடனே பண்டிகைகாலத்திற்குள் வழங்க வேண்டும் என்றார்.

Tags : MLA ,Karaikal ,
× RELATED மக்கள் சாரைசாரையாக வந்து இந்தியா...