×

பள்ளிகளில் விஜயதசமி நாளில் 460 மாணவர்கள் சேர்க்கை: மாநகராட்சி அதிகாரி தகவல்

சென்னை: விஜயதசமியை முன்னிட்டு சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 460க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் சேர்ந்தனர். சென்னை மாநகராட்சி பள்ளிகளில் விஜயதசமி அன்று சிறப்பு மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்று கல்வித் துறை துணை ஆணையர் குமாரவேல் பாண்டியன் அறிவுறுத்தியிருந்தார். இதன்படி சென்னை மாநகராட்சி கல்வி அலுவலர் பாரதிதாசன் தலைமையில் சிறப்பு மாணவர் சேர்க்கை முகாம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள 119 மழலையர் பள்ளிகள், 91 தொடக்கப்பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து பள்ளிகளிலும்  மாணவர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

இதில் 460க்கு மேறப்பட்ட மாணவ, மாணவிகள் பல்வேறு வகுப்பில் சேர்ந்தனர்.  இதில் எஸ்கேஜியில் 261 பேரும், யூகேஜியில் 54 பேரும், 1ம் வகுப்பில் 55 பேரும், 2ம் வகுப்பில் 25 பேரும், 3ம் வகுப்பில் 21 பேரும், 4ம் வகுப்பில் 22 பேரும், 5ம் வகுப்பில் 10 பேரும், 6ம் வகுப்பில் 8 பேரும், 7ம் வகுப்பில் 2 பேரும், 8ம் வகுப்பில் ஒருவர், 9ம் வகுப்பில் ஒருவர் உள்ளிட்ட 460 மாணவ, மாணவிகள் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் உள்ள சென்னை பள்ளிகளில் சேர்ந்தனர். இவர்களுக்கு ஆசிரியர்கள் அரிசியில் ‘அ’ எழுத வைத்து இனிப்பு வழங்கி வகுப்பறையில் அமரவைத்தனர்.

Tags : schools ,
× RELATED சிறுத்தை நடமாட்டத்தால் அரியலூர்...