×

காவலர்களால் தாக்கப்பட்ட கண்டக்டரை கைது செய்ய முயற்சி நாகர்கோவிலில் அரசு பஸ் டிரைவர், கண்டக்டர்கள் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில், அக்.10:  காவலர்களால் தாக்கப்பட்ட அரசு பஸ் கண்டக்டர் மீது வழக்குபதிவு செய்து அவரை கைது செய்ய முயற்சிப்பதை கண்டித்து நாகர்கோவிலில் அரசு பஸ் டிரைவர், கண்டக்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  பணியின்போது காவலர்களால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக நடத்துனர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கையில் இறங்கியுள்ளது. காயமடைந்த நடத்துனருக்கு மண்டல போக்குவரத்து கழக நிர்வாகம் பணி பாதுகாப்பு வழங்க வேண்டும்.
தீபாவாளி பண்டிகை ஞாயிற்றுகிழமை வருவதால் ஏற்கனவே வார விடுப்பில் இருக்கும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு ஒரு விடுப்பு இழப்பு ஏற்படும் என்பதால், தீபாவளிக்கான விடுமுறையை விநாயகர் சதுர்த்தி விடுமுறைக்கு மாற்றி மண்டல ஓட்டுனர் நடத்துனர்களுக்கு தீபாவாளி பண்டிகை கொண்டாடும் உரிமை மறுக்கப்படுவதை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்ட ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் நாகர்கோவிலில் ராணித்தோட்டம், அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.சங்கத்தின் தலைவர் முருகன் போராட்டத்தை தொடங்கி வைத்தார். துணை தலைவர் சந்திரன், துணை செயலாளர் நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : State bus driver ,conductors ,Nagercoil ,
× RELATED நாகர்கோவிலில் கொலை செய்யப்பட்ட...