×

மூன்றாண்டுகளில் மூவாயிரம் கோடி கடன் நாராயணசாமி அரசு சாதனை

புதுச்சேரி, அக். 10:   மூன்றாண்டுகளில் மூவாயிரம் கோடி கடன் வாங்கி நாராயணசாமி அரசு சாதனை படைத்திருப்பதாக  கோகுலகிருஷ்ணன் எம்பி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:  காமராஜர் நகர் இடைத்தேர்தலில் வாக்கு சேகரிப்பின்போது காங்கிரஸ்  வேட்பாளர் ஜான்குமார் புதுச்சேரியின் நிதி சிக்கல்களுக்கு ரங்கசாமிதான் காரணமென கூறியிருக்கிறார். மத்திய அரசு போதுமான நிதியைத் தரவில்லையென எதுவும் புரியாமல் பேசுகிறார். ஸ்மார்ட் சிட்டிக்கு ரூ.1850 கோடி, அம்ருத் திட்டத்தில் ரூ.60 கோடி, குடிநீர் திட்டத்துக்கு ரூ.500 கோடி, சேதராப்பட்டு உறுப்பு மாற்று மையத்துக்கு ரூ.1200 கோடி, சுற்றுலா மேம்பாடுக்கு ரூ.200 கோடி, சாகர் மாலா திட்டத்துக்கு  ரூ.84 கோடி, கிழக்கு கடற்கரை ரயில் பாதைக்கு ரூ.2600 கோடி என சின்னஞ்சிறு மாநிலமான புதுச்சேரிக்கு ரூ.7200 கோடி அளவுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 12,984 பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்புகள், 3,63,355 பேருக்கு முத்ரா கடன் ஆண்டுக்கு ரூ.330 மட்டுமே செலுத்தி, ரூ.2 லட்சம் பேருகு ஆயுள் காப்பீடு என மத்திய அரசின் நிதியால், மக்களுக்குக் கிடைத்த நன்மைகள்.இந்த டெல்லி நிலவரம் எல்லாம் புரியாமல் டெல்லி பிரதிநிதியாக இருந்தவர்தான் ஜான்குமார். அவருக்கு உள்ளூர் நிதி நிலவரம் கூட தெரியாது என்பதுதான் வேதனை. 2007ம் ஆண்டு புதுச்சேரி அரசை  பொதுக் கணக்கு துவங்க வைத்தது, மத்திய காங்கிரஸ் அரசுதான், அதுமட்டுமா?  ரூ.2167 கோடியைத் தள்ளுபடி செய்யாமலே கணக்கு ஆரம்பிக்க வைத்து, புதுச்சேரியை புதைகுழியில் தள்ளியதற்கு காங்கிரஸ்தானே காரணம்.

 2016-17ம் ஆண்டு ரூ.820.17 கோடி, 2017-18ம் ஆண்டு ரூ.1060 கோடி, 2018-19ம் ரூ.1050 கோடி என மூன்றாண்டுகளில் மூவாயிரம் கோடி கடனை வாங்கி சாதனை படைத்த நாராயணசாமியை தங்களுக்கு தெரியாதா? 2008ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டுவரை  மத்திய அரசின் சக்தி வாய்ந்த அமைச்சராக கோலோச்சிய நாராயணசாமியால் ஒரே கையெழுத்தில் மொத்தக் கடனையும் தள்ளுபடி செய்திருக்க முடியும்.  ஏன் செய்யவில்லை. அதோடு கையோடு மாநில அந்தஸ்தையும் பெற்று வந்திருக்கலாம். டெல்லிப் பட்டினத்தின் சொகுசு வாழ்க்கையையும், பதவிச் சுகத்தையும் அனுபவித்து விட்டு, புதுச்சேரியின் வளர்ச்சி முடங்க காரணமாயிருப்பது தற்போதைய முதல்வர்தான். இதுதான் டெல்லி நிலவரமும், புதுச்சேரி நிலவரமும், இனியாவது தான் வகித்த பதிவிக்கேற்ப விவரத்தோடு பேச வேண்டும். போட்டியிலிருந்து விலகத் தயார் என்று சவால் வேறு, விட்டுருக்கிறார், அந்தக் கவலை அவருக்கு வேண்டாம். காமராஜர் நகர் தொகுதி மக்கள் ஜான்குமாருக்கு தகுந்த பாடத்தினை புகட்டுவார்கள்.

Tags : Narayanaswamy Government ,
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...