×

காட்ேடரிகுப்பத்தில் முகாம் அலுவலகம்

புதுச்சேரி, அக். 10:   வில்லியனூர் சார்பு மாவட்ட ஆட்சியர் (தெற்கு) அலுவலகம் சார்பில் வருவாய் அதிகாரி சிவசங்கரன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: மண்ணாடிப்பட்டு மற்றும் கரையாம்புத்தூர் வருவாய் கிராமங்களில் கடந்த மாதம் நடத்தப்பட்ட முகாம் அலுவலகத்தை தொடர்ந்து சார்பு மாவட்ட ஆட்சியர் (தெற்கு) 11ம் தேதி (நாளை) மாலை 4 மணிக்கு காட்டேரிகுப்பம் அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் முகாம் அலுவலகம் நடத்த திட்டமிட்டுள்ளார். இம்முகாமில் சான்றிதழ் வழங்குதல் போன்ற வருவாய்த்துறை சார்ந்த சேவைகளை காட்டேரிக்குப்பம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளான சோரப்பட்டு, வம்புபேட், கொடாத்தூர், தேத்தாம்பாக்கம், சுத்துக்கேணி, புதுக்குப்பம், காட்டேரி, குப்பம், செல்லிப்பட்டு பகுதிவாழ் மக்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது.

வில்லியனூர் வட்டத்தில் உள்ள இந்த கிராமங்களில் உள்ள மக்களுக்கு அளிக்கும் சேவை தொடர்பான சார்பு மாவட்ட ஆ்ட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகம் மூலம் மனுக்கள் குறித்த விசாரணைகளையும் மேற்கொண்டு தீர்வுகளை மேற்கொள்ளவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. மேலும், அப்பகுதியை சேர்ந்த மக்களிடம் புதிய மனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டு கூடுமான வரையில் இம்முகாம் அலுவலகத்திலேயே தீர்வும் அளிக்கப்பட உள்ளது. இது தவிர, முகாமில் பொதுசேவை மையம், ஆதார் மையம் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை சம்பந்தமாக சேவைகளும் வழங்கப்படும். அச்சமயம் துணை மாவட்ட நீதிமன்றம் (தெற்கு) அன்று அங்கு செயல்படும். இம்முகாம் அலுவலகம் பகலில் வேலைக்கு செல்வோரும் சேவை பெறும் நோக்கில் இத்துறையால் மாலை நேரத்தில் நடத்தப்படுகிறது. ஆகையால், காட்டேரிக்குப்பம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராம மக்கள் முகாம் அலுவலகத்தினை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Camp Office ,
× RELATED ஈரோட்டில் ரூ.1.08 கோடியில் டவுன் டிஎஸ்பி...