×

பைக் மோதி பெண் படுகாயம்

திருக்கோவிலூர், அக். 10: திருக்கோவிலூர் அடுத்த வீரபாண்டி கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் மனைவி ராதா (30). இவர் கடந்த 28ம் தேதி மாலை தனது விவசாய நிலத்தில் பணிகளை முடித்து விட்டு வீரபாண்டியில் இருந்து ஆதிச்சனூர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த பைக் ராதா மீது மோதியது. இதில் அவர் பலத்த காயமடைந்தார். இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் அவரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அரகண்டநல்லூர் காவல் நிலையத்தில் ராதாவின் கணவர் ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில் உதவி ஆய்வாளர் சிவானந்தம் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags :
× RELATED நாகர்கோவில் அருகே லாரி - பைக் மோதல் கல்லூரி மாணவர் பலி