×

அரசு பள்ளி ஆசிரியருக்கு நேஷ்னல் பில்டர் விருது

உளுந்தூர்பேட்டை, அக். 10:  உளுந்தூர்பேட்டை ரோட்டரி சங்கம் சார்பில் உளுந்தூர்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசு பள்ளிகளில் சிறப்பாக செயல்பட்ட 35 ஆசிரியர்களுக்கு நேஷ்னல் பில்டர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ரோட்டரி சங்க தலைவர் அன்பழகன் தலைமை தாங்கினார். செந்தில்குமரன் வரவேற்றார். முத்துக்குமாரசாமி இறைவணக்கம் வாசித்தார். மாவட்ட துணை ஆளுநர் காங்கேயன், மாவட்ட லிட்ரசி பொறுப்பாளர் புதுராஜா, செயலாளர் சாமிநாதன், வெங்கடாஜலபதி, துரைராஜ், ஜீவரத்தினம், ரமேஷ்சீசர், பொருளாளர் ரமேஷ்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் கிளாப்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் பழனிக்கு மாநில பள்ளி கல்வித்துறை இயக்குனர் முனைவர் கண்ணப்பன் சிறந்த ஆசிரியருக்கான சான்றிதழ் வழங்கி பாராட்டினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி, உளுந்தூர்பேட்டை மாவட்ட கல்வி அலுவலர் ரவி, முன்னாள் துணை ஆளுநர்கள் அன்பழகன், வின்சென்ட் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இதில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் மோகன்ராஜ், முத்துராமன் உள்ளிட்ட ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.


Tags : Government School Teacher ,
× RELATED கொல்லிமலைக்கு மாறுதலில் சென்ற...