×

36 பேர் மீது வழக்கு பதிவு

உளுந்தூர்பேட்டை, அக். 10: உளுந்தூர்பேட்டை இன்ஸ்பெக்டர் எழிலரசி உத்தரவின்பேரில் உளுந்தூர்பேட்டை, எலவனாசூர்கோட்டை, எடைக்கல், காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது குடிபோதையிலும், லைசன்ஸ் இல்லாமலும், உரிய ஆவணங்கள் இன்றியும், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர மற்றும் கனரக வாகனங்களை ஓட்டிச் சென்ற 36 வாகன ஓட்டுனர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 4 பேரின் லைசன்ஸ்கள் ரத்து செய்ய மோட்டார் வாகன அலுவலகத்திற்கு போலீசார் பரிந்துரை செய்தனர்.

Tags : persons ,
× RELATED பெருங்களத்தூரில் கற்கள் வீசி ரயிலை...