×

அனைத்து இடங்களிலும் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க வேண்டும்

சிதம்பரம், அக். 10: சிதம்பரம் நகரில் உள்ள அனைத்து வீடுகளிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்துதல் தொடர்பாக கட்டிட பொறியாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, சிதம்பரம் நகராட்சி ஆணையாளர் சுரேந்திரஷா தலைமை வகித்து  பேசுகையில், சிதம்பரம் நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில், 266 தெருக்களில் 13 ஆயிரத்து 940 வீடுகள் உள்ளது. சிதம்பரம் நகராட்சி கட்டிட பொறியாளர் சங்கத்துடன் இணைந்து இந்த வீடுகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்துதல், ஏற்கனவே மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு உள்ள வீடுகளில் அதனை புதுப்பித்தல் குறித்து ஆய்வு பணி நடைபெற உள்ளது.

வீடுகள், வணிக வளாகம், கல்வி நிலையங்கள், திருமண மண்டபங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் கட்டாயம் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்கப்பட வேண்டும் என அறிவிப்பு செய்யும் பணியோடு, மழைநீர் சேகரிப்பு அமைக்கப்பட்டுள்ள இடங்களில் அதன் செயலாக்கத்தை உறுதி செய்யும் பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன என்றார்.  கூட்டத்தில், கட்டிட பொறியாளர் சங்க தலைவர் மோகன்தாஸ், ஆலோசகர் கோவிந்தராஜன், நகராட்சி மின் கண்காணிப்பாளர் சலீம் மற்றும் கட்டிட பொறியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Tags : everywhere ,
× RELATED பெரியபாளையம் அருகே அரசு பள்ளி...