×

குறிஞ்சிப்பாடி பகுதியில் அங்கன்வாடி மையங்களில் முட்டை, தானியம் முறையாக வழங்கவில்லை

நெய்வேலி, அக். 10: குறிஞ்சிப்பாடி பகுதியில் அங்கன்வாடி மையங்களில் முறையாக முட்டை, தானியங்கள் வழங்கப்படவில்லை என பெற்றோர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
தமிழக சமூக நலத்துறையின் கீழ் இயங்கும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்ட மையங்களில் உள்ள அங்கன்வாடி பணியாளர், சமையலர் மற்றும் உதவியாளர் பணியிடங்கள் அனைத்தும் நேரடியாக மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக நியமிக்கப்படுகிறது. அங்கன்வாடி மையங்களில் திங்கள், புதன், வியாழன் ஆகிய மூன்று தினங்கள் முட்டை வழங்கப்படும். மற்ற நாட்கள் கலவை சாதத்துடன் கூடிய கொண்டை கடலை, பாசிப்பயிறு, உருளைக்கிழங்கு குழந்தைகளுக்கு வழங்கப்படும். ஆனால் சமீபகாலமாக குறிஞ்சிப்பாடி பகுதிகளில் அரசு முத்திரை வைக்கப்பட்டுள்ள முட்டையை ரசாயனம் கொண்டு அழித்துவிட்டு குழந்தைகளுக்கு வழங்காமல் கடைகளில் விற்பதாக கூறப்படுகிறது.

மேலும் சத்துணவு மையங்களுக்கு வழங்கப்படும் முட்டைகளை சில குழந்தைகள் மட்டுமே சாப்பிடுகின்றனர். ஆனால் வருகை பதிவேட்டில் அதிகம் பேர் சாப்பிடுவதாக குறிப்பிட்டு இருக்கும். அப்படி மிச்சமாகும் முட்டைகள் கடைகளில் கூடுதல் விலைக்கு விற்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி வளர் இளம் பெண்களுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து மாவு, குழந்தைகளுக்கு, முதியவர்களுக்கான ஊட்டச்சத்து என இருவகை மாவுகளை வழங்காமல் மூட்டை 200 ரூபாய்க்கு விற்கின்றனர். பெண்களுக்கு இலவசமாக வழங்கும் நாப்கின் உள்ளிட்டவையும் விற்பனை செய்கின்றனர். அதுமட்டுமின்றி குறிப்பாக பல்வேறு அங்கன்வாடி மையங்களுக்கு ஆசிரியர்கள், சத்துணவு பொறுப்பாளர்கள் பணிகளுக்கு வராமல் சயல் செய்யும் உதவியாளரிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு செல்கின்றனர். எனவே அங்கன்வாடி மையங்களில் பயிலும் குழந்தைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் முட்டைகள், தானிய பயிறுகளை வெளி சந்தையில் விற்கும் ஆசிரியர்கள், சத்துணவு அமைப்பாளர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Tags : centers ,area ,Kurinjipadi ,
× RELATED கடலூரில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இறுதிக்கட்ட பயிற்சி..!!