×

‘நம்ம சென்னை’’ செயலியில் மாநகராட்சி அலுவலர்கள் விபரம் அறியும் வசதி விரைவில் அறிமுகம்

சென்னை, அக். 9: பொதுமக்களின் வசதிக்காக நம்ம சென்னை செயலியில் மாநகராட்சி அலுவலர்களின் தொலைபேசி எண் உள்ளிட்ட தகவல்களை அறிந்து கொள்ளும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தபட உள்ளது. இந்தியாவில் உள்ள பழமையான மாநகராட்சிகளில் சென்னையும் ஒன்றாகும். தற்போது சென்னையில் 200 வார்டுகளும் 12 லட்சத்திற்கு மேற்பட்ட வீடுகளும் உள்ளன. சென்னை மாநகராட்சியில் மன்றத்துறை, வருவாய் மற்றும் நிதி, கல்வி, சுகாதாரம், பொதுத்துறை, நிலம் மற்றும் உடமைத்துறை, இந்திய பொறியியல், மின்சாரம், திடக் கழிவு மேலாண்மை, கட்டிடம், சுகாதாரம், மழைநீர் வடிகால், சிறப்பு திட்டங்கள், பேருந்து சாலைகள், பாலங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகள் செயல்பட்டு வருகிறது. இந்த துறையில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

குறிப்பாக பணிகள் துறையில் மாநகராட்சி தலைமையகத்தில் உள்ள பல்வேறு பொறியியல் பிரிவில் தலைமை பொறியாளர், கண்காணிப்பு பொறியாளர், செயற்பெறியாளர், உதவி செயற்ெபாறியாளர் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொறியாளர்கள் பணியாற்றி வருகிறனர். இதை தவிர்த்து 15 மண்டலங்களிலும் பொறியாளர்கள் பணிபுரிகின்றனர். ஆணையர் தொடங்கி சென்னை மாநகராட்சியின் அனைத்து அதிகாரிகளுக்கும் சென்னை மாநகராட்சி சார்பில் தொலைபேசி எண்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் உயர் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மட்டுமே சென்னை மாநகராட்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இதனால் ஒரு பிரச்னை என்றால் பொதுமக்கள் சென்னை மாநகராட்சியின் தலைமை அலுவலக தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் பொதுமக்கள் தங்களது குறைகளை தெரிவிக்க அந்த பகுதியின் அலுவலர்களை தொடர்பு கொள்ள ஏதுவாக நம்ம சென்னை செயலியில் அதிகாரிகளின் பொறுப்பு மற்றும் தொலைபேசி எண்ணை பதிவேற்றம் செய்ய சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பொதுமக்கள் தங்களின் குறைகளை தெரிவிக்க நம்ம சென்னை செயலி உருவாக்கப்பட்டது. தற்போது பொதுமக்கள் நம்ம சென்னை செயலி மூலம் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை செலுத்தும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் நம்ம சென்னை செயலியில் மாநகராட்சி அலுவலர்களின் தொலைபேசி எண் மற்றும் தகவல்களை பதிவேற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஒரு பகுதியின் செயற்பெறியாளர், உதவி செயற்பொறியாளர், உதவி பொறியாளர், இளநிலை பொறியாளர் அவருக்கு கீழ் பணியாற்றும் பணிகள் துறை அலுவலர்கள் ஆகியோரின் எண்கள் பதிவேற்றம் செய்யப்படும். இதேபோன்று சுகாதார அலுவலர், துப்புரவு மேற்பார்வையாளர், துப்புரவு ஆய்வாளர், சுகாதார அலுவலர், சுகாதார மேற்பார்வையாளர் உள்ளிட்டவர்களின் எண்களும் பதிவேற்றம் செய்யப்படும். பொது மக்கள் இந்த செயலியின் மூலம் தங்களது பகுதியின் அதிகாரி மற்றும் அலுவலர்களை தொடர்பு கொண்டு தங்களது குறைகளை தெரிவிக்கலாம்.

Tags : MUMBAI ,
× RELATED மும்பை பங்குச் சந்தை சரிவுடன் தொடக்கம்