×

கும்மிடிப்பூண்டி அருகே கோயில் திருவிழா நடத்துவதில் கோஷ்டி மோதல் : 2 பேர் மண்டை உடைப்பு

கும்மிடிப்பூண்டி, அக். 9: கோயில் திருவிழா நடத்துவதில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 2 பேர் மண்டை உடைந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து இரு கோஷ்டிகளை சேர்ந்த 5 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். கும்மிடிப்பூண்டி அடுத்த பல்லாவாடா காலனி பகுதியில் 500க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயிலில் புரட்டாசி மாதம் திருவிழா நடத்த கிராம மக்கள் முடிவெடுத்தனர்.
இதில் முறையாக கணக்கு வழக்கு பிரச்னை காரணமாக அதே பகுதியை சேர்ந்த மாரிமுத்து (35). சேகர் (33) என்பவர்களிடையே திடீரென தகராறு ஏற்பட்டது.

இந்த தகராறு முற்றியதில் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர், இதில் மாரிமுத்து மற்றும் சித்திரை ஆகியோரின் மண்டையில் காயம் ஏற்பட்டது.  தொடர்ந்து இருவரும் தனித்தனியாக பாதிரிவேடு காவல்நிலையத்தில் புகார் செய்தனர். மாரிமுத்து அளித்த புகாரின்பேரில் கண்ணாயிரம், ரவிச்சந்திரன், எம்ஜி,  சேகர் புகாரில்இந் கார்த்திக், எல்லையன், உள்ளிட்ட 5 மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று புழல் சிறையில் அடைத்தனர்.  மேலும், இருவர் கொடுத்த புகாரில் 21 பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags : clash ,temple festival ,Kummidipoondi ,
× RELATED கோயில் விழாவில் மோதல்-5 பேர் கைது