×

நாங்குநேரி ஒன்றியத்தில் வாக்கு சேகரிப்பு கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து பணியாற்றுவேன்

நெல்லை, அக்.9: நாங்குநேரி தொகுதி மக்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து பணியாற்றுவேன் என சிறுமளஞ்சியில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் பேசினார். அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன், நாங்குநேரி ஒன்றியத்துக்குட்பட்ட சிறுமளஞ்சி, அணைக்கரை, தளபதி சமுத்திரம் கீழுர், மேலூர், கண்டிகைப்பேரி, கீழ சண்முகபுரம், வேப்பங்குளம் மேலூர், கீழுர், ஆச்சியூர், இரணியன் குடியிருப்பு, ராஜாக்கமங்கலம், மாவடி, தோரண குறிச்சி, ஏமன்குளம், புதுக்குளம், தெற்கு விஜயநாராயணம், துவரம்பாடு, புதூர், ஐந்தாங்கால், ஆண்டான்குளம், திருவரங்கநேரி, இட்டமொழி உள்ளிட்ட இடங்களில் வாக்காளர்களை சந்தித்து வாக்கு கேட்டார். அப்போது அவர் பேசுகையில், ‘‘நான் இந்த மண்ணின் மைந்தராக உங்களிடம் வாக்கு கேட்டு வந்துள்ளேன். நீங்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து பணியாற்றுவேன். அதிமுக அரசு செய்த சாதனைகளை எண்ணிப் பார்த்து நீங்கள் வாக்களிக்க வேண்டும். கிராமங்களில் குடிமராமத்து பணிகளால் நீராதாரம் பேணப்பட்டு வருகிறது.’’ என்றார்.

நிகழ்ச்சியில் நாங்குநேரி ஒன்றிய செயலாளர் விஜயகுமார், முன்னாள் ஒன்றிய செயலாளர் சூரியகுமார், பா.ஜ. மாவட்ட பொதுச் செயலாளர் தமிழ்ச்செல்வன், சிறுமளஞ்சி சிவா, அணைக்கரை ஊராட்சி கழக செயலாளர் கணேசன், இளைஞர் பாசறை செயலாளர் வக்கீல் கணேஷ், பா.ஜ. ஜெயராஜ், நம்பிக்குமார், பரமசிவம் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பங்கேற்றனர். அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் முன்னதாக மேலப்பாட்டம், மணப்படை வீடு, கீழநத்தம், பாளையஞ்செட்டிகுளம், நடுவக்குறிச்சி, மேல புத்தனேரி, கீழ நத்தம், நொச்சிகுளம் உள்ளிட்ட இடங்களில் வாக்கு சேகரித்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் உதயகுமார், எம்எல்ஏ மாணிக்கம், எம்ஜிஆர் மன்ற செயலாளர் பெரியபெருமாள், ஒன்றிய செயலாளர் பாளை மருதூர் ராமசுப்பிரமணியன், ஜெ. பேரவை செயலாளர் ஜெரால்டு, அவைத்தலைவர் கணபதி சுந்தரம், துணைச்செயலாளர் திருத்து சின்னத்துரை, அரியகுளம் செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED நேமம் வாய்க்கால் தூர்வாரும் பணி தீவிரம்