×

பாண்டி அரசு பள்ளியில் சாலை பாதுகாப்பு விதிமுறை விழிப்புணர்வு கருத்தரங்கம்

முத்துப்பேட்டை அக்.9: முத்துப்பேட்டை அடுத்த பாண்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் எடையூர் காவல் நிலையம் சார்பில் சாலை பாதுகாப்பு விதி முறைகள் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம் தலைமை ஆசிரியர் விஜயராஜ் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக ஆசிரியர் ராஜமாணிக்கம் வரவேற்றார். இதில் மாணவர்கள் மத்தியில் எடையூர் இன்ஸ்பெக்டர் சிவதாஸ் சாலை பாதுகாப்பு விதிமுறைகள் குறித்தும், கட்டாயம் ஹெல்மெட் அணிந்து பயணிப்பது குறித்தும் பேசினார். இதில் பட்டதாரி ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Bondi Government School ,
× RELATED பள்ளங்கோயில் கிராமத்தை...