×

காரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க மருத்துவர் வராததால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் போக்குவரத்து பாதிப்பு

பாடாலூர், அக். 9: காரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்க மருத்துவர் வர தாமதமானதால் பொதுமக்கள் சாலை மறிமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆலத்தூர் தாலுகா காரை கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜன் மகன் வீரமணி (33). இவர் குடும்ப பிரச்னை காரணமாக நேற்று அரளி விதையை சாப்பிட்டார். இதையடுத்து அவரை மீட்டு காரை அரசு மருத்துவமனையில சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் பணி மருத்துவர் வரதாமதமானது. இதனால் கிராம பொதுமக்கள் ஒன்று திரண்டு ஆலத்தூர் கேட்- அரியலூர் சாலை காரை கிராமத்தில் மறியல் போராட்டம் நடத்தினர். இந்த தகவல் அறிந்ததும் பணி மருத்துவர் உடனடியாக வந்து சிகிச்சை அளித்து 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதையடுத்து சாலை மறியல் போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டனர். மறியல் போராட்டத்தால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : road ,pickup struggle ,government hospital ,
× RELATED தஞ்சையில் இளம்பெண்ணை காரில் இருந்து...