×

டிப்டாப் ஆசாமிகளுக்கு வலை சீர்காழி திருவெண்காடு பகுதியில் கொசு மருந்தடிக்கும் பணி தீவிரம்

சீர்காழி, அக்.9:சீர்காழி திருவெண்காடு பகுதியில் கொசு மருந்தடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நாகை மாவட்ட கலெக்டர் பீரவின் பி நாயர் உத்திரவின்பேரில் சுகாதாரத்துறை துணை இயக்குநர் சண்முகசுந்தரம் அறிவுரைத்தலின்படி சீர்காழி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜ்மோகன் மேற்பார்வையில் கிராமங்கள் தோறும் கொசு புழு ஒழிப்பு பணி மற்றும் புகை மருந்து அடிக்கும்பணி முழுவீச்சில் நடைபெற்று வருகின்றது. இதனைை தொடர்ந்து, திருவெண்காடு அம்பேத்கர் நகர் பகுதியில் கொசு மருந்து தெளிக்கும் பணிகளை வட்டார மருத்துவ அலுவலர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போழது அவர் கூறுகையில், சீர்காழி வட்டார பகுதிகளில் சுகாதாரத்துறை பணியாளர்கள், உள்ளாட்சித்துறை பணியாளர்களுடன் இணைந்து கொசு மருந்துகள் தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் வீடுகள், தெருக்களில் காணப்படும் குப்பைகள், கழிவுநீர் சாக்கடைகளை முற்றிலும் சுத்தமாக பாரமரிக்க வேண்டும். குப்பைகள் அதிகளவில் சேர்வதன் முலம் கொசுகள் உற்பத்தியாகின்றன. எனவேதான் பொதுமக்கள் தங்கள் பகுதியை தூய்மையாக பராமரிக்க முன்வர வேண்டும். காய்ச்சல் எற்பட்டால் பொதுமக்கள் உடனே அருகில் உள்ள சுகாதார நிலையத்தில் வந்து மருத்துவம் செய்யகொள்ள முன்வர வேண்டும் என்றார் அப்போது, மருத்துவ அலுவலர் பிரபாகரன், சுகாதார ஆய்வாளர்கள் ரங்கராஜன், துரைகார்த்திக், ஊராட்சி செயலர் கார்த்திக் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Tags : area ,Thiruppankadu ,
× RELATED ராஜஸ்தானில் 90,000 ஹெக்டேர் உள்பட...