×

கிப்ட் திலேப்பியா மீன் வளர்த்து விவசாயிகள் பயனடையலாம் கலெக்டர் வேண்டுகோள்

கரூர், அக். 9: “கிப்ட் திலேப்பியா” மீன் குஞ்சுகள் வளர்ப்பு குறித்து கரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: கிப்ட் திலேப்பியா என அழைக்கப்படும் மரபு வழி மேம்படுத்தப்பட்ட பண்ணைத் திலேப்பியா மீன்கள் அதிகளவில் புரதங்களும், உடலுக்கு நன்மை தரக்கூடிய அபரிதமான விட்டமின் சத்துக்களும் நிறைந்த மீன் இனமாகும். குறுகிய காலத்தில் வேகமாக வளரும் இந்த மீன்கள் அனைத்து வகையான நீரின் தன்மை மற்றும் தட்பவெட்ப நிலையில் வளர்வதுடன் மிகுந்த நோய் எதிர்ப்பு சக்தி திறன் கொண்டவை. மேலும் இந்த மீன் இனத்தின் மீன் குஞ்சுகள் அனைத்தும் வேகமாக வளரக்கூடிய ஆண் மீன்களாக இருக்கும் வகையில் விற்பனை செய்யப்படுவதால் இனப்பெருக்கம் செய்வது தவிர்க்கப்பட்டு, மீனினம் உண்ணும் உணவுகள் அனைத்தும் உடல் வளர்ச்சிக்கு பயன்பட்டு விரைவில் வளர்ச்சி அடைந்து விடுவதுடன் நோய் எதிர்ப்பு திறன் காரணமாக மீன்களின் பிழைப்பு விகிதம் அதிகமாக உள்ளது. இவ்வாறு விரைவில் வளரும் தன்மையுள்ளதாலும், மீன் வளர்ப்பு செய்வோர்களுக்கு குறுகிய காலத்தில் லாபம் மற்றும் வருவாயை ஈட்டித் தரக்கூடிய மீன் இனமாகவும் திகழ்கிறது.

இந்த மீன் வளர்ப்பு செய்து கூடுதல் லாபம் பெற்றிட, கிப்ட் திலேப்பியா மீன் குஞ்சுகள் தரமான மற்றும் கலப்பற்ற மீன் குஞ்சுகளாக இருப்பது அவசியமாகும். அத்தகைய தரமான மீன்குஞ்சுகள் தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி அரசு மீன் குஞ்சு உற்பத்தி பண்ணையிலும், மதுரையில் இயங்கி வரும் அரசு அனுமதி பெற்ற தனியார் மீன்குஞ்சு பண்ணையிலும் மட்டுமே கிடைக்கும். இந்த இரு பண்ணைகள் தவிர பிற இடங்களில் பெறப்படும் கிப்ட் குஞ்சுகள் விரைவில் இனப்பெருக்கம் செய்வதுடன் வளர்ச்சி மிகவும் குறைந்து காணப்படும். விவசாயிகள் மற்றும் மீன் வளர்ப்போர் தரமான கிப்ட் திலேப்பியா இன மீன் குஞ்சுகளை பெற குறிப்பிட்டுள்ள முகவரிக்கு தொடர்பு கொள்ளலாம். மேலும் ஏற்கனவே, கிப்ட் திலேப்பியா மீன் வளர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்களது பண்ணை அல்லது குட்டைகளை மீன் வளத்துறையில் பதிவு செய்வது அவசியமாகும்.

எனவே, கிப்ட் திலேப்பியா மீன்வளர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் மீன்வள உதவி இயக்குநர் அலுவலகம், 4, காயிதே மில்லத் தெரு, காஜா நகர், மன்னார்புரம் திருச்சி- 20 (0431- 2421173) என்ற முகவரியில் நேரிலோ அல்லது தொலைபேசியிலோ விபரம் தெரிவித்து குளத்தை அவசியம் பதிவு செய்திட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வினியோகிக்கப்படுகின்றது. இந்நிலையில் தாலுகா அலுவலகம் பின்புறம் நங்காஞ்சி ஆற்றின் கிழக்கு கரை பாலத்தருகே அருகே காவிரி குடிநீர் குழாய் உடைந்துள்ளது. இதிலிருந்து கடந்த ஒரு மாதமாக ஏராளமான குடிநீர் பீய்ச்சியடித்து வெளியேறி ஆற்று மணலில் வீணாகின்றது. மாவட்டம் முழுவதும் வறட்சியான நிலையில் குடிநீர் பற்றாக்குறையான இந்த சமயத்தில் குடிநீர் இப்படி குடிநீர் வீணாகும் அவலமான நிலை உள்ளது. பல முறை அதிகாரிகளிடம் கூறியும் இதுவரையிலும் சரி செய்யாமல் அலட்சியமாக உள்ளதாக அப்பகுதி பொதுக்கள் கவலையுடன் கூறுகின்றனர். மாவட்ட நிர்வாகம் இதனை சரி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kipt ,
× RELATED மயிலாடுதுறை அருகே நெல் விதைப்பை...