×

கரூர் மாவட்டத்தில் தட்கல் முறையில் மின் இணைப்பு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

கரூர்,அக்.9: தட்கல் முறையில் விவசாய மின் இணைப்பு வழங்கப்படுகிறது. விவசாய மின் இணைப்பு பெற காத்திருப்பு பட்டியலில் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விவசாய மின்இணைப்பு பெறும் வகையில், விரைவு (தட்கல்) மின் இணைப்பு வழங்கல் திட்டத்தின் மூலம் 5 குதிரை திறனுள்ள மின் மோட்டார்களுக்கு ரூ. 2,50,000ம், 7.5 குதிரை திறன் உள்ள மின் மோட்டார்களுக்கு ரூ.2,75,000, 10 குதிரை திறன் உள்ள மின் மோட்டார்களுக்கு ரூ.3 லட்சம், 15 குதிரை திறன் வரையுள்ள மின் மோட்டார்களுக்கு ரூ.4 லட்சம் வீதம் ஒருமுறை கட்டணம் செலுத்தும் 10,000 விண்ணப்பதாரர்களுக்கு இலவச விவசாய மின் இணைப்பு வழங்கப்படுகிறது. பல காலமாக மின் இணைப்பு வேண்டி காத்திருப்போருக்கு முன்னுரிமை வழங்கிடும் நோக்கில் கீழ்கண்ட அட்டவணையின்படி தங்கள் பகுதிக்குட்பட்ட செயற்பொறியாளர் இயக்குதலும், பராமரித்தலும் அலுவலகத்தில் விருப்ப கடிதம் மற்றும் உரிய வருவாய் ஆவணங்களுடன் விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.

விண்ணப்பம் பதிவு செய்த காலம், 1.4.2000 முதல் 31.3.2010 வரை. தட்கல் விருப்ப மனு பதிவு செய்யவேண்டிய காலம் 1.10.19 முதல் 15.10.19 வரை, 31.10.19 வரை பதிவு செய்த அனைத்து விண்ணப்பதாரர்களும், 16.10.19 முதல் 31.10.19வரை விருப்ப மனு பதிவு செய்யவேண்டும். மேலும் விருப்ப மனு அளிப்பதற்கு முன்பு பெயர் மாற்றம், புல எண் மாற்றம் மற்றும் தடையில்லா சான்றிதழ் (தேவைப்படின்) ஆகியவற்றுடன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் இத்திட்டத்தில் மின்பளு மாற்றத்திற்கு அனுமதி இல்லை என கரூர் மின்வாரிய செயற்பொறியாளர் செந்தாமரை தெரிவித்துள்ளார்.

Tags : district ,Karur ,
× RELATED கரூர் மாவட்டத்தில் வரத்து அதிகரிப்பால் தேங்காய் விலை வீழ்ச்சி