உளுந்தூர்பேட்டையில் மதுபாட்டில் விற்ற 7 பேர் கைது

உளுந்தூர்பேட்டை,  அக். 9: உளுந்தூர்பேட்டை  மற்றும் திருநாவலூர் காவல்நிலையத்திற்கு உட்பட்ட  பகுதியில் சப்இன்ஸ்பெக்டர்கள் பால்ராஜ், பலராமன் மற்றும் போலீசார் தீவிர  சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது நாச்சியார்பேட்டை, தேவியானந்தல்,  ஈஸ்வரகண்டநல்லூர், பெரியப்பட்டு, பரிக்கல் உள்ளிட்ட கிராமங்களில் பதுக்கி  வைத்து மதுபாட்டில்களை விற்பனை செய்த மணி(55), மாசிலாமணி(61), ராதா(60),  கனகராஜ்(43), ஆறுமுகம்(45), சங்கர்(41), ஆறுமுகம்(65) ஆகிய 7 பேரை கைது  செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 50 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Related Stories:

>