×

தூக்கிட்டு பெண் தற்கொலை

புவனகிரி, அக். 9:  பரங்கிப்பேட்டை அருகே உள்ள வல்லம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமதாஸ்(38). இவரது மனைவி மஞ்சுளா(32). இவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்திருந்தனர். இந்நிலையில் மஞ்சுளாவுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளதாகவும், இந்த பிரச்னை குறித்து காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ராமதாஸ் மஞ்சுளாவை சம்பவத்தன்று வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.  அன்று இரவே மஞ்சுளா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து ராமதாஸ் பரங்கிப்பேட்டை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : suicide ,
× RELATED இடி தாக்கி பெண் விவசாயி பலி