×

சதுரகிரியில் விஜயதசமியையொட்டி ஆனந்தவள்ளியம்மன் அம்பு விடும் நிகழ்வு

வத்திராயிருப்பு, அக். 9: விஜயதசமியை முன்னிட்டு, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலிலில் உள்ள ஆனந்தவள்ளி அம்மன் சன்னதியில் 10ம் நாளான நேற்று அம்பு போடும் நிகழ்வு நடந்தது. இதைக் காண ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே, மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில், ஆனந்தவள்ளி அம்மன் சன்னதி உள்ளது. இங்கு நவராத்திரி விழாவையொட்டி, கடந்த மாதம் 29ம் தேதி அதிகாலை  அம்மனுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. அன்று இரவு முதல் நாள் கொலு, பஜனை சிறப்பு வழிபாடு தொடங்கியது. அன்று இரவில் பெய்த மழையால் அருவி, ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்து, கடந்த செப்.30ம் தேதி முதல் அக்.4ம் தேதி வரை சதுரகிரியில் தரிசனம் செய்ய அனுமதியில்லை.

அதன் பின், கடந்த 5ம் தேதி முதல் நேற்று வரை 4 நாட்களுக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். பின் தினசரி கொலு, பஜனை நடந்தது. 7ம் தேதி 9ம் நாள் கொலு, சரஸ்வதி பூஜை, ஆனந்தவள்ளி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் பஜனை, சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நேற்று 10ம் நாள் விஜயதசமியையொட்டி, ஆனந்தவள்ளி அம்மனுக்கு மகிஷாசுரவர்த்தினி அலங்காரம் செய்து, அம்புவிடும் நிகழ்வு மாலை 4 மணிக்கு மேல் 5 மணிக்குள் நடைபெற்றது. இதைக் காண ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். நேற்றுடன் நவராத்திரி விழா நிறைவு பெற்றது. இதற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் விஸ்வநாத் செய்திருந்தார். ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்

Tags : Vijayadasamy ,Sadakiri ,
× RELATED வரும் வெள்ளிக்கிழமை விஜயதசமி அன்று...