×

கல்குவாரியில் இரும்பு பலகை திருடியவர்கள் கைது

தேவதானப்பட்டி, அக். 9: தேவதானப்பட்டியில் உள்ள கல்குவாரியில் இரும்பு பலகை திருடியவர்களை போலீசார் கைது செய்தனர். தேவதானப்பட்டி போலீசார் பைபாஸ் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது பைபாஸ் அருகே உள்ள தனியார் சாலை அமைக்கும் கம்பெனிக்கு சொந்தமான கல்குவாரியில் சிலர் ஆட்டோவில் இரும்பு பலகையை ஏற்றிக்கொண்டிருந்தனர். போலீசாரை கண்டதும் அவர்கள் ஆட்டோவை விட்டுவிட்டு தப்பிச்சென்றனர். போலீசார் ஆட்டோ மற்றும் திருடிய இரும்பு பலகையை கைப்பற்றினர். திருடிய இரும்பு பலகையின் மதிப்பு ரூ.28 ஆயிரம் ஆகும். பின்னர் தப்பியோடிய தேவதானப்பட்டியை சேர்ந்த காஞ்சிராஜா(25), சூரியநாராயணன்(22), சரவணன்(21), ரஞ்சித்குமார்(25), தங்கேஸ்வரன்(28) ஆகியோரை கைது செய்து சிறையிலடைத்தனர்.

Tags : board ,
× RELATED யூடியூப், பேஸ்புக், டிவிட்டர்...