×

ஓடும் லாரியிலிருந்து 9 மூட்டை ஏலக்காய் மாயம்

போடி, அக். 9: ஓடும் லாரியிலிருந்து 9 மூட்டை ஏலக்காய் மாயமானதாக டிரைவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கேரள மாநிலம் இடுக்கி மாடவட்டத்திலுள்ள செம்மணாறை பகுதியை சேர்ந்தவர் ஜோசப் மகன் தாமஸ்(60). இவர் நேற்று இடுக்கி அருகிலுள்ள ஜக்குபள்ளம் என்ற இடத்திலிருந்து ஏலம் விடப்பட்ட கம்பெனியிலிருந்து ஏலக்காய் மூட்டைகளை லாரியில் ஏற்றி தார்பாய் போட்டு மூடப்பட்டு தமிழ்நாடு தேனி மாவட்ட போடி திருமலாபுரத்திலுள்ள தனியார் கம்பெனிக்கு கொண்டு வருவதற்காக குமுளி வழியாக வந்தனர். அப்போது டிரைவருடன் லோடுமேன்கள் நந்தகுமார், மாரிமுத்து, சிவா ஆகிய மூன்று பேர்களும் வந்தனர்.

இரவு 10 மணிக்கு லாரி கம்பம் வந்தவுடன் தங்களுக்கு வேலை இருப்பதாக கூறிேலாடு மேன்கள் இறங்கிக் கொண்டனர். பின்னர் தாமஸ் மட்டும் லாரியை ஓட்டிவந்து நள்ளிரவு 1 மணிக்கு போடி திருமலாபுரம் காமராஜர் சிலை அருகே நிறுத்திவிட்டு தூங்கினார். பின்னர் 3 லோடு மேன்களும் போடிக்கு வந்து கம்பெனியில் ஏலக்காய் மூட்டைகளை இறக்கி விடுவதற்கு லாரியில் ஏறி பார்த்தபோது, தார்ப்பாய் கிழிக்கப்பட்டு 9 ஏலக்காய் மூட்டைகள் திருடப்பட்டிருந்தது தெரிந்தது.
உடனடியான ஒரு வாகனத்தை எடுத்து வந்த பாதையில் ஓட்டி சென்றபோது போடி தேவாரம் சாலையிலுள்ள போ.நாகலாபுரம் விலக்கில் ஏலக்காய் சிதறி கிடந்தது. இதுகுறித்து டிரைவர் தாமஸ் போடி புறநகர் காவல் நிலையத்தில் புகார் செய்ததையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனையை துவக்கியுள்ளனர்.

Tags :
× RELATED 9-வது மாவட்டமாக தூத்துக்குடி...