சென்னை துறைமுகத்தில் கல்வி சுற்றுலா சென்ற ஆதரவற்ற குழந்தைகள்

சென்னை, அக். 9: துறைமுக தினத்தையொட்டி ஆதரவற்ற குழந்தைகள் சென்னை துறைமுகத்தில் சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர். இந்த நிகழ்வு மகிழ்ச்சி தருகிறது என்று துறைமுக தலைவர் ரவீந்திரன் தெரிவித்தார்.
சென்னை துறைமுக தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு வாரம் முழுவதும் கலை இலக்கிய நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக ஆதரவற்ற மாணவர்கள் சென்னை துறைமுகத்தில் சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர். இதன்படி நேற்று முன்தினம் ஆதரவற்ற மாணவர்கள் சென்னை துறைமுகம் மற்றும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பல்களுக்கு பார்வையிட்டனர். இவர்களுக்கு துறைமுக ஊழியர்கள் கப்பல்களின் செயல்பாடுகள் தொடர்பாக விளக்கம் அளித்தனர். இதுதொடர்பாக சென்னை துறைமுக தலைவர் ரவீந்திரன் கூறியதாவது: இன்று இந்த ஆதரவற்ற குழந்தைகளை  சென்னை துறைமுகம் ஆதரவுக்கரம் நீட்டி அவர்களை அழைத்து இந்த கல்வி சுற்றுலாவை நடத்தியுள்ள மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. இதுபோன்ற பணிகள் தொடர்ந்து நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : tour ,Chennai ,port ,
× RELATED வட சென்னையில் மாஞ்சா நூலால்...