செங்கோட்டையில் நிலவேம்பு குடிநீர் வழங்கல்

செங்கோட்டை, அக். 4: செங்கோட்டை யில் டெங்கு விழிப்புணர்வு மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. செங்கோட்டை குழந்தை தெரசம்மாள் ஆலயம் முன்பு டெங்கு விழிப்புணர்வு மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பங்குத்தந்தை  பிளேஸ் தலைமை வகித்தார். சித்த மருத்துவர் கலா, டெங்கு காய்ச்சல் தடுப்பு முறைகள், காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மேற்கொள்ள வேண்டிய சிகிச்சை முறைகள் மற்றும் நிலவேம்பு குடிநீரின் பயன்கள் குறித்து விளக்கினார். தொடர்ந்து பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.

Tags : Water Supply ,Red Fort ,
× RELATED உதயநிதிஸ்டாலின் நற்பணிமன்றம் ...