×

புளியங்குடி பள்ளியில் விளையாட்டு தின விழா

புளியங்குடி, அக். 4:  புளியங்குடி கண்ணா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் பாரம்பரிய விளையாட்டு தினம் கொண்டாடப்பட்டது.  காலாண்டு விடுமுறை முடிந்து நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. 2ம் பருவத்தின் முதல் நாள் என்பதால் “நோ பேக் டே” எனப்படும் புத்தகமில்லா தினமாக அறிவிக்கப்பட்டது. மேலும் மாணவர்களுக்கு பாரம்பரிய விளையாட்டுகளை நினைவு கூறும் வகையில் பச்சக்குதிரை, நொண்டி, கொல கொலயா முந்திரிக்கா, ஒரு குடம் தண்ணி எடுத்து, திரி திரி பொம்மக்கா உட்பட 40 வகையான விளையாட்டுகள் நடத்தப்பட்டன. இதில் மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு விளையாடினர். பள்ளி முதல்வர் செந்தில்நாதன் பாரம்பரிய விளையாட்டுகளின் அவசியத்தையும், அதன் மறைமுக பயன்களையும் எடுத்துரைத்தார்.  போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தாளாளர் சுபாஷ் கண்ணா பரிசுகள் வழங்கினார்.  நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முதல்வர் செந்தில்நாதன் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

Tags : Game Day Fun ,Puliyankudi School ,
× RELATED புளியங்குடி பள்ளியில் உலக வனவிலங்கு தினவிழா